January 22, 2023

லம்போர்கினியின் புது சூப்பர்கார்
இந்திய சந்தையில் அறிமுகம்

புது தில்லி, டிச.10

லம்போர்கினி நிறுவனம் ஹூரகேன் ஸ்டெராடோ மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடலின் விலை ரூ. 4 கோடியே 61 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

லம்போர்கினி நிறுவனம் புதிய ஹூரகேன் ஸ்டெராடோ மாடலை மொத்தத்தில் 1,499 யூனிட்களை மட்டுமே உற்பத்தி செய்ய இருக்கிறது. உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் துவங்குகிறது. சர்வேதச அளவில் லம்போர்கினி நிறுவனத்தின் மிகமுக்கிய சந்தைகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. இதன் காரணமாக லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் தனது சூப்பர்கார் மாடல்களின் முன்பதிவை இருமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 15 முதல் 18 மாதங்களுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டதாக அறிவித்துள்ளது.

புதிய ஸ்டெரடோ மாடல் ஆஃப்-ரோடு சார்ந்த சஸ்பென்சன் செட்டப் கொண்டிருக்கிறது. இது ஸ்டாண்டர்டு மாடலை விட 44துது உயரமாக இருக்கிறது. லம்போர்கினி ஹூரகேன் ஸ்டெராடோ மாடலில் 5.2 லிட்டர் என்ஏ வி10 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் 602 ஹெச்பி பவர், 560 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 260 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். மேலும் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 3.4 நொடிகளில் எட்டிவிடும்.

Spread the love