September 27, 2022

ரேசன் கடைகளில் கூகுள்பே, பேடிஎம் மூலம் பணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்ய திட்டம்

சென்னை, செப்.3

ரேசன் கடைகளில், கூகுள் பே, பேடிஎம் போன்ற மின்னணு முறையில் பணம் வசூலிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக, கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மாநிலம் முழுதும் உள்ள ரேசன் கடைகளில் வாடகை கட்டடங்களில் இயங்கும், 6,907 கடைகளுக்கு, ஆண்டுக்கு, 300 வீதம் சொந்த கட்டடம் கட்டப்பட உள்ளது.

எம்.எல்.ஏ., – எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் சமூக பொறுப்புணர்வு திட்டங்களின் வாயிலாக கட்டடம் கட்டப்படும்.ரே­ன் கடைகளுக்கு தர கட்டுப்பாடு தொடர்பான, ஐ.எஸ்.ஓ., தரச்சான்றும், உணவு பொருட்கள் இருப்பு வைப்பதற்கு தேவையான, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., சான்றும் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட ரேசன் கடைகளில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 2 கிலோ, 5 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்கள் விற்கப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும், 10 ரேசன் கடைகளை, மாதிரி கடைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தேர்ந்தெடுக்கப்பட்ட சில ரேசன் கடைகளில், கூகுள் பே, பேடிஎம் போன்ற யு.பி.ஐ., டிஜிட்டல் வசதி வாயிலாக பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என்றார். இது, படிப்படியாக மாநிலம் முழுதும் விரிவாக்கம் செய்யப்படும்.ரே­ன் கடைகளுக்கு அருகில் காலியிடம் இருந்தால், 50 ஆயிரம் கிலோ வரையிலான கொள்ளளவு உடைய உணவு பொருட்கள் வைக்கும் கிடங்குகள் கட்டப்படும்.ரே­ன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை, ‘எவர்சில்வர்’ கொள்கலன்களில் வைத்து வினியோகம் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love