December 9, 2022

ரெப்கோ வங்கிக்கு மூன்று விருதுகள் கூட்டுறவுகளுக்கு தேசிய கூட்டமைப்பு வழங்கியது

சென்னை, அக்.26

சென்னையில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வங்கியின் பொது மேலாளர் மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி பி.கே. வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தேசிய கூட்டுறவு வங்கிகளின் உச்சிமாநாடு மத்தியப் பிரதேசம், இந்தூரில் கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரெப்கோ வங்கிக்கு 3 விருதுகளை கூட்டுறவு வங்கிகளுக்கான தேசியக் கூட்டமைப்பு வழங்கியது. சிறந்த மனித வள மேம்பாடு, சிறந்த முதலீட்டு செயல்பாடு, சிறந்த சேகரிப்பு செயல்பாடு ஆகிய 3 பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை மற்றும் மியான்மரிலிருந்து வந்தவர்களின் நல்வாழ்வுக்காக மத்திய மற்றும் தென் மாநில அரசுகளின் நிதியுதவியுடன் மத்திய அரசால் ரெப்கோ வங்கி 1969ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மொத்த வர்த்தகம் ரூ.17,000 கோடி என்ற மைல்கல்லைத் தாண்டி, தற்போது தென் இந்தியாவில் 108 கிளைகளைக் கொண்டுள்ள அந்த வங்கி, தொடர்ந்து 30 ஆண்டுகளாக லாபத்தை ஈட்டி மத்திய மாநில அரசுகளுக்கு 20 சதம் வரை ஈவுத்தொகை வழங்கி வருகிறது.

Spread the love