November 29, 2022

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் விரைவில் அறிமுகம்

மும்பை, நவ.1

சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 12 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 12 சீரிசில்- ரெட்மி நோட் 12, ரெட்மி நோட் 12 ப்ரோ, ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடல் இந்திய சந்தையில் சியோமி 12ஐ ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது. ஸ்மார்ட்போன் சந்தை வல்லுனரான கேக்பர் ஸிபெக் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் சியோமி 12ஐ ஹைப்பர்சார்ஜ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இந்தியாவில் சியோமி 12ஐ ஹைப்பர்சார்ஜ் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.

முன்னதாக இந்தியாவில் இந்த ஆண்டு துவக்கத்தில் சியோமி 11ஐ ஹைப்பர்சார்ஜ் 5ஜி மாடலை அறிமுகம் செய்து இருந்தது. இதில் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், சியோமி 11ஐ 5ஜி மாடலில் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது. சியோமி 12ஐ ஹைப்பர்சார்ஜ் மாடலின் அம்சங்கள் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

அந்த வகையில், 6.67 இன்ச் எப்எச்டி ஒஎல்இடி, 120எர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், எச்டிஆர்10+ வசதி, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், மாலி-ஜி68 ஜிபியு வழங்கப்படும் என தெரிகிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் மாடலில் 200 எம்பி பிரைமரி கேமராவுடன், மூன்று கேமரா சென்சார்களும், 16 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏயஹச் பேட்டரி கொண்டிருக்கிறது.

Spread the love