September 27, 2022

ரூ.89.11 லட்சம் மதிப்புள்ள 1.989 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

சென்னை, செப்.13

07.09.2022 அன்று, துபாயிலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இன்டிகோ ஏர்லைன்சை சேர்ந்த 6சி-66 என்ற எண் கொண்ட விமானம் வந்திறங்கியது. அந்த விமானத்தின் முன்பக்க கழிவறையின் டிஷ்யூ வைக்கும் தட்டின் பின்புறம், பசை வடிவில் மறைத்து வைத்திருந்த,740 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.33.15 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், 09.09.2022 அன்று, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சிலு 544 என்ற எண் கொண்ட எமிரேட்ஸ் விமானத்தில் வந்திறங்கிய அஷ்பேக் ஹாசனை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவரது மலக்குடலில் பசை வடிவில் பதுக்கி வைத்திருந்த தங்கம், மற்றும் உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த தங்கச்சங்கிலி ஆகியவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 1,249 கிலோ எடைக்கொண்ட அவற்றின் மதிப்பு ரூ.55.96 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, சுங்கச்சட்டம் 1962-ன்கீழ், ரூ.89.11 லட்சம் மதிப்பிலான, 1.989 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை இணைஆணையர் எம்.மேத்யூ ஜோலி தெரிவித்துள்ளார்.

Spread the love