December 9, 2022

ரூ.82 லட்சம் மதிப்புள்ள 1.85 கிலோ கிராம் தங்கம்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்

சென்னை, அக்.29

விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, சூடான் நாட்டிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த ஒருவரை விமான நிலைய சுங்கத்துறைனர் சோதனை செய்தனர். அப்போது நூதன முறையில் பசை வடிவிலான தங்கமும், தங்கக் கட்டியும் கடத்தி கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.

1.85 கிலோ கிராம் எடை கொண்ட இந்த தங்கத்தின் மதிப்பு ரூ.82.41 லட்சம் ஆகும். இவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் திரு எம் மேத்யூ ஜாலி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love