October 3, 2022

ரூ.76 ஆயிரம் கோடி ஊக்குவிப்பு திட்டம் செமி கண்டக்டர்கள், டிஸ்ப்ளே உற்பத்தி துறையை மேம்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புது தில்லி, செப்.22

செமி கண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்காக ரூ.76 ஆயிரம் கோடி ஊக்குவிப்பு திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான திட்டத்தின் கீழ், அனைத்து தொழில்நுட்ப முனையங்களுக்கும், திட்ட செலவில் சமவீத அளவில் 50 சத நிதியுதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தினால், உற்பத்தி, முதலீடுகள் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று அரசு கருதுகிறது. சூரிய மின்தகடுகள் திட்டத்தில் ரூ 19,500 கோடி செலவிலான உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவிக்கையில், செமிகண்டக்டர் துறை ஊக்குவிப்பால், ரூ. 94 ஆயிரம் கோடிக்கு நேரடி முதலீடு கிடைக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் இறக்குமதியை சார்ந்து இருப்பது குறையும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.

Spread the love