December 9, 2022

ரூ.32 ஆயிரம் கோடி மதிப்புள்ள
டெஸ்லா பங்குகளை விற்ற எலான் மஸ்க்

வா´ங்டன், நவ.10

டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32,200 கோடி மதிப்புள்ள பங்குகளை எலான் மஸ்க் விற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சமூக வலைதளமான டிவிட்டரை ரூ.3.50 லட்சம் கோடிக்கு சமீபத்தில் வாங்கினார்.

இதன் செலவினங்களை குறைப்பதற்காக, உலகம் முழுவதும் டுவிட்டரில் பணியாற்றும் 50% ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். மேலும், டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக, டெஸ்லா நிறுவனத்தின் ரூ.32,200 கோடி மதிப்பிலான 195 லட்சம் பங்குகளை கடந்த 5 நாட்களில் மஸ்க் விற்றுள்ளார்.

மேலும், அமெரிக்க பங்குகள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்த ஆவணங்களில் இது குறித்தும், கடந்த ஏப்ரல் முதல் தற்போது வரை, ரூ.1.55 லட்சம் கோடி மதிப்பிலான டெஸ்லா பங்குகளை விற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். டிவிட்டரை வாங்கும் திட்டத்துக்காக, கடந்த ஆகஸ்ட்டில் மட்டும் ரூ.57,000 கோடி மதிப்பிலான டெஸ்லா பங்குகளை அவர் விற்றார். இதனால் அவரது நிகர சொத்து மதிப்பு ரூ.16.30 லட்சம் கோடிக்கு கீழ் சரிந்த போதிலும், உலகின் நம்பர் 1 பணக்காரராக தொடர்ந்து நீடிக்கிறார்.

Spread the love