September 27, 2022

ரூ.3,000 கோடி திரட்டியது ஹெச்டிஎஃப்சி வங்கி

மும்பை, செப்.10

காப்புறுதி பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.3,000 கோடி நிதியை தனியாருக்குச் சொந்தமான ஹெச்டிஎஃப்சி திரட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதலீட்டாளர்களுக்கான தனி வெளியீடு மூலம் காப்புறுதிப் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,000 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற, சார்நிலையான, முழுமையாக செலுத்தக்கூடிய, மாற்ற முடியாத காப்புறுதிப் பத்திரங்களாக அவை வெளியிடப்பட்டன. 7.84 சத வட்டிக்கு அந்த காப்புறுதிப் பத்திரங்கள் வெளியிடப்பட்டன என்று அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love