February 3, 2023

ரூ.222 விலையில் புதிய பிரீபெய்ட் சலுகை ஜியோ நிறுவனம் அறிவிப்பு

மும்பை, டிச.7

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2022 உலக கோப்பை கால்பந்து தொடரை ஒட்டி புது பிரீபெயிட் சலுகையை அறிவித்துள்ளது. புதிய ஜியோ ரூ.222 விலை சலுகையில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய கால்பந்து டேட்டா பேக் பிரீபெயிட் சலுகை பயன்படுத்தும் அனைவருக்கும் வழங்கப்படுகிறது. அந்த வகையில், இந்த சலுகையை பெறும் முன் ஏற்கனவே ஒரு சலுகையில் ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும். புதிய ரூ.222 சலுகையை ரிலையன்ஸ் ஜியோ புட்பால் டேடா பேக் என அழைக்கிறது. எனினும், இந்த சலுகை உலக கோப்பை கால்பந்து தொடர் நிறைவு பெற்றாலும் தொடர்ந்து வழங்கப்படும் என்று தெரிகிறது.

ஜியோ ரூ. 222 4ஜி டேட்டா பேக் விவரங்கள்: ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையில் 50 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், இந்த சலுகை விவரங்கள் மைஜியோ செயலியில் இடம்பெற்று இருக்கிறது. கூடுதல் டேட்டா பயனர் ஏற்கனவே பயன்படுத்தும் சலுகையில் உள்ள அன்றாட டேட்டா தீர்ந்ததும் பயன்படுத்திக் கொள்ளலாம். கட்டணத்தை பொருத்தவரை புது சலுகையில் ஒரு ஜிபி டேட்டாவுக்கு ரூ. 4.44 செலவாகிறது. இது போட்டி நிறுவனங்களை விட குறைவு ஆகும். ஏர்டெல் நிறுவனம் 50 ஜிபி டேட்டாவை ரூ. 301 விலையில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் ஒரு ஜிபி டேட்டாவுக்கான கட்டணம் ரூ. 6.02 ஆகும். ரிலையன்ஸ் ஜியோ ரூ. 222 சலுகையை ஆன்லைன் வலைதளம் அல்லது ரிடெயில் ஸ்டோர் சென்று நேரடியாகவும் ரிசார்ஜ் செய்து கொள்ள முடியும்.

Spread the love