January 24, 2023

ரூ.1,620 கோடியில் தானியங்கி மெட்ரோ ரயில்
மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

சென்னை, டிச.7

சென்னையில் ரூ.1,620 கோடி செலவில் டிரைவர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் இயக்குவதற்கான பணிகள் தொடங்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு அடிப்படையிலான ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு டிரைவர் இல்லாமல் தானாகவே ரயில் இயங்குவதற்கு வழிவகுக்கிறது.

மேலும், இந்தச் சிறப்பான கட்டமைப்புக்கு உயரிய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்பட இருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும். வெற்றிகரமான பரிசோதனைகளுக்கு பின்னர் ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தள பரிசோதனை மற்றும் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love