September 27, 2022

ரூ.1600 கோடி முதலீடு செய்கிறது
லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர்

புது தில்லி, செப்.5

இத்தாலிய ஸ்கூட்டர் பிராண்டு ஆன லாம்ப்ரெட்டா, புதிய அவதாரத்துடன் இந்தியாவுக்கு மீண்டும் களமிறங்குகிறது.

லாம்ப்ரெட்டா, தற்போது பேர்டு மொபிலிட்டி எனும் நிறுவனத்தின் கூட்டுடன், இந்தியாவுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்காக இந்த நிறுவனம், அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரூ.1,600 கோடி முதலீட்டை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. முதலில் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்களுடன் சந்தைக்கு வரும் இந்நிறுவனம், 2024ல், மின்சார ஸ்கூட்டரையும் அறிமுகம் செய்ய உள்ளது. இது குறித்து, உலகளவில் இந்த பிராண்டை வைத்திருக்கும் இன்னோசென்டி எஸ்.ஏ., நிறுவனத்தின் உரிமையாளர், வால்டர் ய­ப்ரான் கூறியதாவது:இந்த பிராண்டின் ஆன்மா இந்தியாவில் உள்ளது. அது மக்களின் மனம் கவர்ந்த ஒன்று. கடந்த கால நிலையை மீண்டும் உருவாக்க விரும்புகிறோம். அதிக சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய விரும்புகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிறுவனம், இந்தியாவில் உற்பத்தியை மேற்கொண்டு, பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டுள்ளது.

Spread the love