November 29, 2022

ரூ.14000 கோடிக்கு சாம்சங் போன்கள் விற்பனை

புது தில்லி, நவ.7

ரூ.14 ஆயிரம் கோடிய்க்கு சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: சாம்சங் இந்தியா நிறுவனம், செப்டம்பரில் -அக்டோபர் மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட 14 ஆயிரத்து, 400 கோடி ரூபாய் மதிப்பிலான, மொபைல்போன்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், நடப்பு ஆண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில், மதிப்பின் அடிப்படையில், 99 சத வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. 30 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள், பிரீமியம் பிரிவு போன்களாக வகைப்படுத்தப்படுகிறது. மேலும், இந்த விற்பனை அதிகரிப்புக்கு, சாம்சங் பைனான்ஸ் பிளஸ் நிறுவனத்தின் பங்களிப்பும் முக்கியமான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love