October 4, 2022

ரூ.11,999 முதல் தொடங்கும் 5ஜி ஸ்மார்ட்போன்கள் சலுகையை அறிவித்தது அமேசான் நிறுவனம்

சென்னை, செப்.21

மொபைல் போன்களை சலுகை விலையில் விற்பனை செய்வது தொடர்பான அறிவிப்பை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த தளத்தில் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ரூ.11,999 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகையில் பொருட்களை அமேசான் வழங்க உள்ளது.

இந்தியாவில் பெரும்பாலான மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் மின்னணு வர்த்தக தளங்களில் ஒன்று அமேசான். அவ்வப்போது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சலுகைகளை அறிவிப்பது அந்நிறுவனத்தின் வழக்கம். அதனை அந்த தளத்தின் வாடிக்கையாளர்களும் சரியாக பயன்படுத்திக் கொள்வார்கள். அந்த வகையில் இப்போது மொபைல் போன்களுக்கான சலுகைகளை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரியல்மி, ரெட்மி, சாம்சங், ஐகூ, சியோமி, ஒன்பிளஸ், டெக்னோ, விவோ, ஒப்போ, லாவா என முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் இந்த சலுகையில் அடங்கும் என தெரிகிறது. மேலும், ஐபோன் 12 மாடல் போன் 40 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என தெரிகிறது. இதே போல ஃபிளிப்கார்ட் நிறுவனமும் சலுகை அறிவித்துள்ளது. வரும் 23ம் தேதி முதல் இரண்டு நிறுவனங்களும் பண்டிகை கால சலுகை விற்பனையை தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love