October 3, 2022

ரூ.1.14 லட்சம் கோடி ரீபண்ட்
வருமான வரித்துறை தகவல்

சென்னை, செப்.5

வருமான வரி தாக்கல் செய்தவர்களுக்கு ஏப்.1 முதல் ஆக.31 வரை, ரூ.1.14 லட்சம் கோடி வங்கி கணக்கில் திருப்பி செலுத்தப்பட்டிருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

2021 – 22ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வது, கடந்த ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், 5.83 கோடி பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இறுதி நாளான, ஜூலை, 31ல், 72 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்திருந்தனர்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்த 1.96 கோடி தனிநபர்களுக்கு 61,252 கோடி ரூபாயும், 1,46,871 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ரீபண்டாக ரூ.53,158 கோடியும் செலுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் முதல் 4 மாதங்களில், கடந்தாண்டு ஒப்பிடுகையில் கார்ப்பரேட் வரி வசூல் 34 சதம் வளர்ச்சியடைந்துள்ளது. இதனிடையே, 2022-23 பட்ஜெட்டின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட புதிய வருமான வரி தாக்கல் படிவத்தின் கீழ் ரூ.28 கோடி வரி வசூல் ஆகியுள்ளது. சுமார் 1 லட்சம் பேர் வரி தாக்கல் செய்துள்ளனர். மேலும், 2020-21, 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கு தாக்கல் செய்தோருக்கு ஐ.டி.ஆர் யூ படிவம் கிடைக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love