December 9, 2022

ரூபாயில் சர்வதேச வர்த்தகம்
9 ர´ய வங்கிகளில் கணக்குகள் தொடக்கம்

புது தில்லி, நவ.16

இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகம் செய்ய ஏதுவாக 9 ர´ய வங்கிகளுடன் இந்திய வங்கிகள் கணக்குகளைத் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து மத்திய வர்த்தகத்துறை செயலர் சுனில் பிராத்வால் தெரிவித்துள்ளதாவது: வோஸ்ட்ரோ எனும் இந்த வங்கிக் கணக்குகள் ர´யாவின் மிகப் பெரிய வங்கிகளான ஸ்பர்பேங்க், விடிபி பேங்க் ஆகிய வங்கிகளில் தொடங்க ஆர்பிஐ அனுமதி அளித்தது. ரஷ்யாவின் காஸ்பரோம் வங்கிக்கு இந்தியாவில் கிளை இல்லாத காரணத்தால் கொல்கத்தா யூகோ வங்கியில் இந்த வோஸ்ட்ரோ கணக்கை தொடங்கி உள்ளது. இதேபோல், 6 ரஷிய வங்கிகள் இந்தியாவின் இண்டஸ்இண்ட் பேங்கில் 6 வோஸ்ட்ரோ கணக்குகளை தொடங்கி உள்ளன.

மேலும், இதன் மூலம் ரஷியாவுடன் நடைபெறும் வர்த்தகத்தை இந்திய ரூபாயில் செலுத்த முடியும். மேலும், கூடுதல் தொகையையும் இந்திய அரசு பாதுகாப்புப் பத்திரங்களில் முதலீடு செய்யவும் வோஸ்ட்ரோ கணக்குகளுக்கு ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது.

இந்திய ரூபாயிலான சர்வதேச வர்த்தகம் விரைவில் தொடங்கப்படும். மேலும், ரூபாயின் வர்த்தக பயன்பாட்டை சர்வதேச அளவில் அதிகரிக்க யூகோ வங்கியுடன் ஆர்பிஐ, நிதிச் சேவைகள் துறையினர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டின் நலனை கருத்தில் கொண்டே ரூபாய் வர்த்தகம் சர்வதேச அளவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், இதன் மூலம் டாலரின் தேவைக்காக காத்திருக்க வேண்டியதில்லை. முடிந்த வரை ரூபாய் மூலம் சர்வதேச வர்த்தகத்தை செய்யலாம் என்று அவர் தெரிவித்தார்.

Spread the love