October 3, 2022

ரூபாயின் மதிப்பை இந்தியா பாதுகாக்க தேவையில்லை: அனந்த நாகேஸ்வரன்

புது தில்லி, செப்.14

ரூபாயின் மதிப்பை இந்தியா பாதுகாக்கத் தேவையில்லை என்றும்; ரூபாய், அதன் மதிப்பை, அதுவே பார்த்துக் கொள்ளும் என்றும், தலைமை பொருளாதாரஆலோசகர் அனந்த் நாகேஸ்வரன் தெரிவித்துள்ளதாக செய்திகள் ளெவியாகியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ரூபாய் மதிப்பை இந்தியா பாதுகாக்கவில்லை என்றும், அதன் மதிப்பை அதுவே பார்த்துக் கொள்ளும் என்றார். மேலும், ரூபாயின் மதிப்பு, சந்தை போக்குகளுக்கு ஏற்ப இருப்பதைஉறுதி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், ரூபாயை இந்தியஅடிப்படைகள்காக்க வேண்டும் என்று நான் கருதவில்லை. சந்தைப் போக்குகளுக்கு ஏற்ப, ரூபாய் எந்தத் திசையில் நகர்கிறதோ, அந்த நகர்வு சரியாக இருப்பதையும், இறக்குமதியாளர்கள் அல்லது ஏற்றுமதியாளர்களுக்கு சுமை இல்லாமல் இருப்பதையும், ஆர்பிஐ உறுதி செய்து வருகிறது. உலகளாவிய சூழல், மூதலன வரவை தடுப்பதாக இருப்பதால், அன்னிய செலாவணி இருப்பு குறைகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love