February 3, 2023

ரியல் எஸ்டேட்டுக்கு ஸ்டேக் புதிய தளம் ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்தது

சென்னை, டிச.2

ரியல் எஸ்டேட் துறையில் உள்ள நிறுவனங்களுக்கு, ஒரே தளத்தில் வங்கி தேவைகளுக்கான தீர்வுகளை வழங்க, ஸ்டேக் எனும் புதிய வசதியை, ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ரியஸ் எஸ்டேட் துறையைச் சேர்ந்த கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளை மற்றும் மாற்று முதலீட்டு நிதிகள் ஆகியவற்றை வங்கிப் பரிவர்த்தனைகளாக்கும் வகையில், ஸ்டேக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதில், கட்டுமான நிறுவனங்களுக்கு, டிஜிட்டல் வாயிலாக வங்கி கணக்கு துவங்குதல், ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவதற்கான கணக்கு எண்களை உடனடியாக உருவாக்குதல், கட்டுமான நிதி உதவி உட்பட பல்வேறு வசதிகள் உள்ளன. பணம் செலுத்தும் வசதியும் உள்ளது. இதுகுறித்து, ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குனர் அனுப் பாக்சி தெரிவித்துள்ளதாவது: மொத்த உள்நாட்டு உற்பத்தியில், ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு, 2025ம் ஆண்டில், 7 சதத்தில் இருந்து, 13 சதமாக அதிகரிக்கும். எனவே, இந்த துறையை சேர்ந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதோடு, அவர்களின் முழு சூழல் அமைப்புக்கும் தீர்வுகளை வழங்கும் ஒரு தொடர்பு முனையை அறிமுகப்படுத்தி உள்¼ளாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love