February 3, 2023

ரியல்மி ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் டிச.8ம் தேதி அறிமுகம்

சென்னை, நவ.25

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடல்கள் இந்தியாவில் டிசம்பர் 8ம் தேதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: கடந்த மாத வாக்கில் ரியல்மி தனது ரியல்மி 10 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இவை இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மாடலில் வளைந்த டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடலில் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர், 120எர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 16 எம்பி செல்ஃபி கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்தியாவில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மற்றும் ரியல்மி 10 ப்ரோ மாடல்களின் விலை பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை உணர்த்தும் வகையில் ப்ளிப்கார்ட் தனது வலைதளத்தில் பிரத்யேக வலைப்பக்கம் ஒன்றை திறந்துள்ளது. இதில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி மற்றும் ரியல்மி 10 ப்ரோ 5ஜி மாடல்களின் விவரங்கள் இடம்பெற்று இருக்கின்றன. மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் 5ஜி என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

Spread the love