October 3, 2022

ராயல் என்ஃபீல்டு கடந்த ஆகஸ்ட் மாதம் 70,112 வாகனங்களை விற்பனை செய்தது

சென்னை, செப்.3

கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கான ராயல் என்ஃபீல்டு பைக்கின் விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தை ஒப்பிடும் போது 52.88 சத வளர்ச்சியும், கடந்த ஜூலை மாத விற்பனையை ஒப்பிடும் போது 26.20 சத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

ராயல் என்ஃபீல்டு கடந்த ஆகஸ்ட் மாதம் மொத்தம் 70,112 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் உள்நாட்டில் மட்டும் 62,892 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 7,220 வானகங்கள் ஏற்றுமதியாகியுள்ளது. இதுவே கடந்தாண்டு விற்பனையுடன் ஒப்பிடும் போது கடந்தாண்டு வெறும் 39,070 வாகனங்கள் மட்டுமே உள்நாட்டில் விற்பனையாகியிருந்தது. 6790 வாகனங்கள் ஏற்றுமதியாகியிருந்தது

உள்நாட்டு விற்பனையில் 60.97 சத வளர்ச்சியும், ஏற்றுமதியில் 6.33 சத வளர்ச்சியையும் பெற்றுள்ளது. இதுவே வாகனத்தின் வகையின் வாரியாக பார்த்தால் கடந்த மாதம் 350 சிசிக்கு குறைவான வாகனங்கள் மொத்தம் 62,236 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. 350 சிசிக்கு அதிகமான வாகனங்கள் மொத்தம் 7876 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இதை ஒப்பீட்டு பார்த்தாலும் கடந்தாண்டு 350 சிசிக்கு குறைவான வாகனங்களாக 38,572 வாகனங்கள் விற்பனையாகியிருந்தது. 350 சிசிக்கு அதிகமான வாகனங்களாக 7,288 வானகங்கள் விற்பனையாகியிருந்தது. இது 350 சிசிக்கு குறைவான வாகன விற்பனையில் 61.35 சதவீத வளர்ச்சியும், 350 சிசிக்கு அதிகமான வாகனங்களில் 8.07 சதவீத வளர்ச்சியையும் பெற்றுள்ளது.

இதுவே கடந்த ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் மொத்தமாக 26.20 சத வளர்ச்சியைப் பெற்றுள்ளது. கடந்த ஜூலை மாதம் மொத்தம் 46,529 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளது, 9,026 வாகனங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகியுள்ளது.

Spread the love