October 4, 2022

ரானே ஹோல்டிங்ஸ் ரூ.703 கோடி வருவாய் ஈட்டியது

புது தில்லி, பிப்.10

ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஒருங்கிணைந்த அளவில் டிசம்பருடன் முடிவடைந்த 3வது காலாண்டில் ஈட்டிய மொத்த வருவாய் ரூ.703.2 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலத்தில் ஈட்டிய வருவாய் ரூ.673.6 கோடியுடன் ஒப்பிடுகையில் 4.4% அதிகம் ஆகும். மேலும், வரிக்கு முந்தைய லாபம் ரூ.64.3 கோடியிலிருந்து 71.3% குறைந்து ரூ.18.5 கோடியானது.

ஒட்டுமொத்த குழும வருவாய் 1.8% அதிகரித்து ரூ.1,392.4 கோடியாகவும், வரிக்கு முந்தைய இழப்பு ரூ.15.7 கோடியாகவும் இருந்தது என ரானே ஹோல்டிங்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

Spread the love