September 27, 2022

ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க
ஜப்பானுடன் இந்தியா ஒப்பந்தம்

டோக்கியோ, செப்.9

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா – ஜப்பான் நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையயழுத்தாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஐந்து நாள் அரசு முறைப் பயணத்தில் கிழக்காசிய நாடான மங்கோலியா பயணத்தை முடித்து விட்டு, ஜப்பானுக்கு சென்றுள்ளார்.
அவருடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் உயர் அதிகாரிகளும் வந்தனர்.

ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களின் 2 பிளஸ் 2 கூட்டத்தில் இருவரும் பங்கேற்றனர்.

பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இந்தியா – ஜப்பான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையயழுத்தானது. ஜப்பான் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் யோசி´மாசா ஹயாசி´ மற்றும் ராணுவ அமைச்சர் யசுகாசு ஹமாடா ஆகியோர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

Spread the love