September 27, 2022

ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விடலாம்: அரசு ஒப்புதல்

புது தில்லி, செப்.8

ரயில்வே நிலத்தை 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இதுவரை ரயில்வே நிலம் 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு அளிக்கப்பட்டநிலையில், இனி 35 ஆண்டுகள் வரை குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நிலத்தின் மதிப்பில் 1.5% ரொக்கம் குத்தகை தொகையாக வசூலிக்கப்படும். கொள்கை மாற்றத்தால் நாடு முழுவதும் 300 சரக்கு கையாளும் முனையங்கள் அமையும் என மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Spread the love