February 3, 2023

யுருஸ் பர்ஃபார்மன்ட் கார் மாடல்: லம்போர்கினி அறிமுகம்

மும்பை, நவ.29

ரூ.4.22 கோடி விலையில் புதிய கார் ரகத்தை இத்தாலிய சூப்பர் ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான லம்போர்கினி நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எங்களது “யுருஸ் பர்ஃபார்மன்ட் காரை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளோம். மேலும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உலகளாவிய சந்தையில் அந்தக் கார் அறிமுகமானது. எனினும், குறுகிய கால இடைவெளியில் இந்திய வாடிக்கையாளர்களுக்கும் அந்தக் கார் கிடைக்கவிருக்கிறது.

இந்தியச் சந்தையில் லம்போர்கினியின் வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை யுருஸ் பர்ஃபார்மன்ட் ரகம் ஏற்படுத்தித் தரும் என தெரிவித்துள்ளது.

மேலும், இந்தக் கார்களின் விலைகள் ரூ.4.22 கோடியில் (காட்சியக விலை) தொடங்குகின்றன. 3.3 விநாடிகளுக்குள் மணிக்கு 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிடும் இந்த எஸ்யுவி வகைக் கார், அதிகபட்சம் மணிக்கு 306 கி.மீ. வேகத்தில் பறக்கக்கூடியது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love