November 29, 2022

யுபிஐ சேவைக்கு ஆதரவு அதிகரிப்பு: எப்ஐஎஸ் ஆய்வு

புது தில்லி, நவ.7

பெரும்பாலான இந்தியர்கள் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது, யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்துவதை விரும்புவதாக எப்ஐஎஸ் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிதிச்சேவை நிறுவனமான எப்ஐஎஸ் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியர்கள் மத்தியில் நிதி நுட்ப சேவைகள் மற்றும் வசதிகள் பிரபலமாகி வருவதை தெரிவிக்கிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 63 சதம் பேர், செயலிகளுக்குள் அளிக்கப்படும் சலுகைகளை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், 55 சதம் பேர், அடுத்த 12 மாதங்களில் ஆன்லைனில் காப்பீடு சேவைகளை அணுக இருப்பதாகவும், 70 சதம் பேர், சமூக ஊடக செயலிகள் வாயிலாக மளிகை பொருட்களை வாங்கும் விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஆன்லைனில் கிடைக்கும் வசதியோடு, உடனடியாக விருப்பம் நிறைவேறுவதையும் இந்தியர்கள் விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது.

அதே நேரத்தில் பெரும்பாலான இந்தியர்கள், சமூக ஊடக செயலிகள் வாயிலாக ஷாப்பிங் செய்வது தொடர்பான கவலைகளையும் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில், 76 சதம் பேர், ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது யுபிஐ மூலமான பண பரிவர்த்தனையை நாடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Spread the love