October 3, 2022

யுனெஸ்கோ கல்வி நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் 3 நகரங்கள் இடம் பிடித்தது

புது தில்லி, செப்.6

பலதரப்பட்ட மக்களிடையே கல்வியைக் கொண்டுசேர்ப்பதில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக கேரளத்தின் திருச்சூர், நிலம்பூர் ஆகிய நகரங்களும் தெலங்கானாவின் வரங்கல் நகரமும் யுனெஸ்கோவின் கல்வி நகரங்கள்பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் யுனெஸ்கோ சர்வதேச கல்வி நகரங்கள் பட்டியலை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பட்டியலில் 44 நாடுகளைச் சேர்ந்த 77 நகரங்கள் புதிதாக இணைக்கப்பட்டுள்ளன.

பலதரப்பட்ட மக்களுக்கு சிறப்பான கல்வி சேவைகளை வழங்கி வருவதற்காக திருச்சூர், நிலம்பூர், வரங்கல் ஆகிய நகரங்கள் யுனெஸ்கோவின் பட்டியலில் இணைந்துள்ளன. மக்களுக்கு கல்வி சேவைகளைக் கொண்டுசெல்லும் சிறப்பான நகரங்களைக் கண்டு மற்ற நகரங்கள் ஊக்கம் பெற இந்நடவடிக்கை உதவுவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. வரங்கலில் உள்ள ராமப்பா கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ கடந்த ஆண்டு அறிவித்தது. தற்போது வரங்கல் நகரம் கல்வி நகரங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மதிப்புமிக்க கலாசாரத்தை சர்வதேச அளவில் தெரியப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதற்காகப் பிரதமர் மோடிக்கு மத்திய கலாசாரத் துறை அமைச்சர் ஜி.கி­ண் ரெட்டி நன்றி தெரிவித்தார்.

Spread the love