October 3, 2022

யுனிகார்ன் அந்தஸ்து பெற்றது டாடா 1 எம்ஜி

புது தில்லி, செப்.6

டாடா 1 எம்ஜி நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இணைவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஒரு பில்லியன் டாலர் அதாவது, ரூ.8 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்புடைய, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், யுனிகார்ன் அந்தஸ்து பெற்ற நிறுவனங்களாக கருதப்படும். அந்த வகையில், டாடா 1 எம்.ஜி., நிறுவனத்தின் மதிப்பு, ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டியதை அடுத்து, யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது. ஆன்லைன் வாயிலாக மருந்து விற்பனையில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், அண்மையில் நிதி திரட்டும் முயற்சியில் களமிறங்கியது.

டாடா டிஜிட்டல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக நிதி திரட்டியதை அடுத்து, இதன் மதிப்பு, ரூ.10 ஆயிரம் கோடியை எட்டியது. இந்நிறுவனத்துக்குப் போட்டியாக இருக்கும் பார்ம்ஈஸி நிறுவனமும் நிதி திரட்டுவதற்காக இறங்கியது. ஆனால், புதிய பங்கு வெளியீடு வாயிலாக திரட்ட முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும், சந்தை நிலவரம் சரியாக இல்லாமல் போகவும் அந்த முயற்சியை கைவிட்டது, பார்ம்ஈஸி.இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட 105 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love