October 3, 2022

மோன்ட்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ
டிஐ க்ளீன் மொபிலிட்டி அறிமுகம்

சென்னை, செப்.6

முருகப்பா குழுமத்தைச் சேர்ந்த டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஐ க்ளீன் மொபிலிட்டி சென்னையில் மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3 டபிள்யு ஆட்டோவை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆஃப் இந்தியா செயல் தலைவர் அருண் முருகப்பன் தெரிவித்துள்ளதாவது: மோன்ட்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ எங்களுக்கான புதிய வளர்ச்சி மற்றும் கண்டுபிடிப்பை குறிக்கும். மோன்ட்ரா எலெக்ட்ரிக் ஆட்டோ மூலம் நாங்கள் காற்று மாசுபாட்டை போக்க கடும் முயற்சிசெய்கிறோம். 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் முயற்சியில் இந்த பிரிவு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இப்புதிய ஆட்டோ குறித்தவாடிக்கையாளர்களின் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளோம் என்றார்.

மேலும், டிஐ க்ளீன் மொபிலிட்டி நிர்வாகஇயக்குநர் கே.கே.பால் தெரிவித்துள்ளதாவது: மோன்ட்ரா எலெக்ட்ரிக் 3 டபிள்யு ஆட்டோ புதுமை மற்றும் தொழில் துறையில் முதன்மையான அம்சங்களை கொண்டுள்ளது. இதில் உள்ள 10 கி.வாட் பேட்டரி மூலம் 197 கி.மீ. தூரம் செல்ல முடியும். மணிக்கு 55 கி.மீ வேகம், 60என்எம் முறுக்கு திறன், மல்டி டிரைவ் முறைகள், பார்க் அசிஸ்ட் ஆகியவற்றை கொண்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை நிறைந்ததாகவும் இருக்கும். டிஜிட்டல் ஃபைனான்சிங், 24 மணிநேர சாலையோர உதவி, 2 வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாத விருப்பம், 3 ஆண்டுகளுக்கான வருடாந்திர பராமரிப்பு வசதி போன்றவையும் வழங்கப்படும். இவ்வாறு முருகப்பா குழுமம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love