November 29, 2022

மோட்டோரோலா – பாரத் எலக்ட்ரானிக்ஸ் இடையே கூட்டு

பெங்களூரு, நவ.5

நவரத்னா அந்தஸ்து பெற்ற பொதுத்துறையைச் சேர்ந்த, பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பிராட்பேண்டு மற்றும் புஷ் டு டாக் ஆகிய சேவைகள் சம்பந்தமாக மோட்டோரோலா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதற்காக இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து மேலும் செய்தியாவது: தொழில் முறை ரீதியிலான, ‘மொபைல் ரேடியோ’ பிரிவில், பயனர்கள் அவர்கள் குழுவினருடன் வேகமான, திறன் மிகுந்த இணைப்புக்கான சேவையை பெற, இந்த ஒப்பந்தம் பயனளிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்காக, மோட்டோரோலா வேவ் பி.டி.எக்ஸ்., எனும், புஷ் டு டாக் சேவை பயன்படுத்தப்பட உள்ளது. இந்த வேவ் பி.டி.எக்ஸ்., ஒரு தனிப்பட்ட மல்டிமீடியா தொடர்புக்கான சேவையாகும். புஷ் டு டாக் என்பது ‘வாக்கி டாக்கி’ போன்ற சேவையாகும்.

மேலும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், பிளாக்செயின் தொழில்நுட்பம் சம்பந்தமாக, சிங்கப்பூரைச் சேர்ந்த, ஐஎன்இஆர்ஒய் எனும் நிறுவனத்துடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Spread the love