December 9, 2022

மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா விலை குறைப்பு

சென்னை, நவ.7

பிளிப்கார்ட் தளத்தில் பிளிப்கார்ட் மோடோ டேஸ் சேல் எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இதில் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ரூ.59,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது விலைகுறைக்கப்பட்டு ரூ.54,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் ரூ.5000 வரை விலைகுறைப்பை பெற்றுள்ளது.

இதன் சிறப்பம்சங்களாவது: 6.67-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் பிஒஎல்இடி கர்வ் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 2400 மு 1080 பிக்சல்ஸ், 1250 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 பிளஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 60எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 4610 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் டால்பி அட்மாஸ் ஆதரவு, 10 வாட்ஸ் வயர்லெஸ் பவர் ஷேரிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த மோட்டோ போன்.

Spread the love