January 26, 2023

மேக்புக் ஏர் மாடலுக்கு அதிரடி விலை குறைப்பு

சென்னை, ஜன.19

ஆப்பிள் மேக்புக் ஏர் எம்1 மாடல் க்ரோமா வலைதளத்தில் ரூ.73,900 விலையில் கிடைக்கிறது. ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்களில் மேக்புக் ஏர் விலை தொடர்ந்து ரூ. 99,900 என்றே பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

சக்திவாய்ந்த லேப்டாப் வாங்க நினைப்போரின் தேர்வாக ஆப்பிள் மேக்புக் மாடல்கள் விளங்குகின்றன. க்ரோமா வலைதளத்தில் மேக்புக் ஏர் எம்1 மாடலின் விலை ரூ. 83,900 என பட்டியலிடப்பட்டு இருக்கிறது. எனினும், யஹச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பட்சத்தில் ரூ. 10 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெறலாம். இதன் மூலம் மேக்புக் ஏர் எம் 1 2020 மாடலின் விலை ரூ.73,900 என குறைந்து விடும்.

அறிமுகம் தற்போது க்ரோமா தளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கும் விலை ஆப்பிள் தளத்தில் இருப்பதை விட ரூ. 16 ஆயிரம் குறைவு ஆகும். அந்த வகையில், கூடுதலாக ரூ. 10 ஆயிரம் சேர்க்கும் பட்சத்தில் மேக்புக் ஏர் 2020 மாடலுக்கு ரூ. 26 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

மேக்புக் ஏர் எம் 1 மாடலில் 13.3 இன்ச் எல்இடி பேக்லிட் ஐபிஎஸ் டிஸ்ப்ளே, 2560×1600 பிக்சல் ரெசல்யூசன், 400 நிட்ஸ் பிரைட்னஸ், எம் 1 சிப்செட், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 2 டிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ், மேக் ஒஎஸ் வெண்டுரா, 720 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்டி கேமரா, டச் ஐடி சென்சார், 49.9 வாட் ஹவர் பேட்டரி, 30 வாட் சார்ஜிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த லேப்டாப் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், பிளேபேக், 3-மைக் அரே, வைடு ஸ்டீரியோ சவுண்ட் கொண்டுள்ளது.

Spread the love