November 29, 2022

மெட்டா நிறுவனத்தில் இருந்து 11,000 ஊழியர்கள் நீக்கம்

நியூயார்க், நவ.10

அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலன் மஸ்க் ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள் நிலையில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

தற்போது, வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையிலும் செலவை குறைக்கும் விதமாகவும் 11,000 ஊழியர்களை நீக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இது குறித்து மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளதாவது: மெட்டாவின் வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்களை பகிர்கிறேன். எங்கள் குழுவின் அளவை சுமார் 13% குறைக்கவும், 11,000 க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்¼ளன் என்று மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். மேலும் வேலைக்கு ஆட்களை எடுப்பதை அந்நிறுவனம் நிறுத்திவைத்துள்ள நிலையில், இதனை நீட்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனது முடிவு தொடர்பாக, “இது அனைவருக்கும் கடினமானது என்பதை நான் அறிவேன், குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் வருந்துகிறேன்’ எனவும் அவர் கூறியுள்ளார். பணி நீக்கம் செய்யப்படுபவர்களுக்கு 16 வாரங்களுக்கான அடிப்படை ஊதியம் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என்றும் மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Spread the love