December 9, 2022

மெட்டா நிறுவனத்தின் வருவாய் சரிவு

நியூயார்க், அக்.28

கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில் வருவாயும் லாபமும் சரிவை மெட்டா நிறுவனம் சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளது. ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான 3-வது காலாண்டு நிதிநிலை அறிக்கையை பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டுள்ளது.

இதன்படி, 3-வது காலாண்டில் மெட்டா நிறுவனம் 440 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 164 டாலர் லாபம் ஈட்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தோடு ஒப்பிடும்போது 52% குறைவு. கடந்த ஆண்டின் 3-வது காலாண்டில் இந்நிறுவனம் 919 கோடி டாலர் அல்லது ஒரு பங்குக்கு 322 டாலர் லாபம் ஈட்டியது. டிக்டாக்குடன் போட்டி: நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 4% சரிந்து 2,771 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 2,901 கோடி டாலராக இருந்தது. மேலும், மெட்டா நிறுவனத்தின் வருவாய் தொடர்ந்து 2-வது காலாண்டாக சரிந்தது. இதையடுத்து, அமெரிக்க பங்குச் சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 14% சரிவை சந்தித்தன. விளம்பர வருவாய் குறைந்தது மற்றும் டிக்டாக் செயலியின் போட்டி ஆகிய காரணங்களால் மெட்டா வருவாய் சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Spread the love