December 9, 2022

மெட்டா இந்தியாவின் தலைமை பொறுப்புக்கு சந்தியா தேவநாதன் நியமனம்

புது தில்லி, நவ.18

மெட்டா நிறுவனம், இந்தியாவின் தலைமை பொறுப்புக்கு சந்தியா தேவநாதனை நியமித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக ஊடகங்களின் தாய் நிறுவனமான மெட்டா, ஒருபக்கம் ஆள்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், இன்னொருபக்கம், மெட்டா இந்தியாவின் துணைத் தலைவராக சந்தியா தேவநாதனை நியமித்துள்ளது.

மேலும், மெட்டா இந்தியா நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து, கடந்த மாத துவக்கத்தில் அஜித் மோகன் ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது சந்தியா தேவநாதன் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2016ல், மெட்டாவில் சேர்ந்த சந்தியா தேவநாதன், சிங்கப்பூர், வியட்னாம் வணிகங்களை கட்டி எழுப்புவதில் அதிக பங்காற்றி உள்ளார். தற்போது, இந்தோனே´யாவில் ஆசிய பசிபிக் நாடுகளுக்கான ‘கேமிங்’ பிரிவில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். ஜனவரி 1ம் தேதியிலிருந்து, புதிய பொறுப்பை ஏற்க உள்ளார், சந்தியா தேவநாதன்.

Spread the love