September 27, 2022

மூன்றாம் காலாண்டில் ஐஆர்சிடிசி
நிகர லாபம் ரூ.209 கோடி அதிகரிப்பு

மும்பை, பிப்.9

நடப்பு ஆண்டின் மூன்றாம் காலா‌ண்டில் ஐஆர்சிடிசியின் நிகர லாப‌ம் 168 சதம் அதி​கரி‌த்து ரூ.209 கோ​டி​யாக உய‌ர்‌ந்​து‌ள்​ள​தா​க‌ ரயில்வேத் துறை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: நட‌ப்பு நிதி​யா‌ண்​டி‌ன்(2021-22) மூ‌ன்​றாம் காலா‌ண்​டி‌ல்(டிசம்பர்-31, 2021) ஐஆர்சிடிசியின் நிகர லாப‌ம், இதே முந்தைய கால​க‌ட்​ட‌த்​தி‌ல் இரு‌ந்த ரூ.70.9 கோடி​யி​லி​ரு‌ந்து 168 சத‌ம் அதி​க​ரி‌த்து ரூ.209 கோடி​யாக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 2020-21 ஆண்டின் மூன்று காலாண்டின் நிகர லாபமான 224 கோடியிலிருந்து 140 சதம் அதிகரித்து நடப்பு ஆண்டின் மூன்று காலாண்டுகளின் லாபம் 540 கோடியாக உயர்ந்துள்ளது.

இதனால், ஐஆர்சிடிசி லாபத்தொகையாக(டிவிடெண்ட்) பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.2 வழங்க முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

Spread the love