September 27, 2022

மூக்கு வழியே செலுத்தும் கொரோனா மருந்துக்கு
மத்திய அரசு அனுமதி: அமைச்சர் தகவல்

புது தில்லி, செப்.6

மூக்கு வழியாக செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்துக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: பிபிவி154 என்ற மூக்குத் துவாரம் வழியே செலுத்தப்படும் கொரோனா மருந்துக்கு மத்திய அரசின் அனுமதி பெற்று பாரத் பயோடெக் நிறுவனம் சோதனை செய்தது. இந்நிலையில், சோதனை செய்த தரவுகளை சமர்ப்பித்து மூக்கு வழி செலுத்தக்கூடிய மருந்தினை பயன்பாட்டுக்கு கொண்டுவர அனுமதி கோரி பாரத் பயோடெக் நிறுவனம் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.

சோதனைகளில் இது பாதுகாப்பானது என்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது என்றும் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. மேலும், இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Spread the love