February 3, 2023

முறையற்ற வர்த்தகம் ரூ.1,338 கோடி அபராதத்தில் கூகுள்
10 சதம் செலுத்த வேண்டும்: என்சிஎல்ஏடி உத்தரவு

புது தில்லி, ஜன.5

முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதாக ரூ.1,337.76 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து கூகுள் நிறுவனம் செய்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்ட தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) மொத்த அபராதத் தொகையில் 10 சதத்தை செலுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: ஆன்ட்ராய்டு செல்போன்களுக்கு தேவையான ஆப்களை டவுன்லோடு செய்வதில் கூகுள் ஆப்ஸ் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதை பயன்படுத்தி போட்டி நிறுவனங்களுக்கு எதிராக கூகுள் நிறுவனம் முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக இந்திய வணிக போட்டி ஆணையம் (சிசிஐ) விசாரணை நடத்தியது. மேலும், விசாரணை முடிவில், முறையற்ற வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக கூகுளுக்கு ரூ.1,337.76 கோடி அபராதத்தை சிசிஐ கடந்த அக்டோபர் 20ம் தேதி விதித்தது. இதை எதிர்த்து கூகுள் சார்பில் தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தீர்ப்பாயம், 2 மாதத்திற்குப் பிறகு வழக்கு தொடுத்து விட்டு, 2 நிமிடத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென விரும்புகிறீர்கள். முறையான விசாரணை இல்லாமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. எனவே கூகுள் நிறுவனம் அபராதத்தில் 10 சதம் செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டு, சிசிஐ பதிலளிக்க நோட்டீஸ் விடுத்து வழக்கை பிப்ரவரி 13ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Spread the love