January 21, 2023

முன்பதிவில் புது மைல்கல் எட்டியது
மாருதி சுசூகி ஜிம்னி

புது தில்லி, ஜன.21

ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் ஜனவரி 12ம் தேதி காட்சிக்கு வைக்கப்பட்ட நிலையில், புதிய மாருதி சுசுகி ஜிம்னி மாடல் முன்பதிவில் 5 ஆயிரம் யூனிட்களை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்திய சந்தையில் புதிய ஜிம்னி ஆஃப் ரோடர் மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. நீண்ட வீல்பேஸ், இரண்டு கூடுதல் கதவுகள், ரிடிசைன் செய்யப்பட்ட ரியர் குவார்ட்டர் தவிர, ஜிம்னி 5-டோர் வெர்சன் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் ஜிம்னி 3-டோர் வெர்சனை போன்றே காட்சியளிக்கிறது. புது மாடலில் அப்ரைட் பில்லர்கள், வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப்கள், ஸ்லாட் கிரில், அகலமான டயர்கள், ஃபிலேர்டு வீல் ஆர்ச்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த காரின் உள்புறம் ஆல்-பிளாக் தீம் ரக்கட் டிசைன், ஹை-மவுண்ட் செய்யப்பட்ட 9 இன்ச் டச் ஸ்கிரீன், எச்சிஏசி கண்ட்ரோல்கள், வட்ட வடிவ டயல்கள், டேஷ்போர்டில் மவுண்ட் செய்யப்பட்ட கிராப் ஹேண்டில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் மாருதி சுசுகி நிறுவனத்தின் மாருதி ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி, ஆர்கமிஸ் சவுண்ட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. என்ஜினை பொருத்தவரை புதிய மாருதி சுசுகி ஜிம்னி 5-டோர் மாடலில் புதிய கே15சி யூனிட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் அல்லது 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 105 ஹெச்பி பவர், 134 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது.

Spread the love