January 25, 2023

மீனாட்சி எனர்ஜியை கையகப்படுத்துகிறது வேதாந்தா

புது தில்லி, ஜன.20

திவாலான மீனாட்சி எனர்ஜி நிறுவனத்தை, வேதாந்தா’ நிறுவனம் ரூ.1,440 கோடிக்கு கையகப்படுத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: அனல் மின் நிறுவனமான மீனாட்சி எனர்ஜி நிறுவனத்தை, அதிக தொகைக்கு ஏலம் கேட்டதை அடுத்து, அந்நிறுவனம் வேதாந்தா வசம் ஆகிறது. மீனாட்சி எனர்ஜி நிறுவனத்தை கையகப்படுத்த, நிர்வாக குழு உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்ததை அடுத்து, வேதாந்தா ஏல நடவடிக்கையில் கலந்துகொண்டது. கையகப்படுத்தும் பணிகள், அடுத்த நிதியாண்டுக்குள் முழுமையடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துவக்கத்தில் ரூ.312 கோடியையும்; மீதி ரூ.1,1228 கோடியை, ஐந்து சம தவணைகளிலும் ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக வேதாந்தா வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி எனர்ஜி நிறுவனத்துக்கான திவால் நடவடிக்கைகள், கடந்த 2019 நவம்பரில் துவங்கியது. இந்நிறுவனத்தை கையகப்படுத்த, ஜிண்டால் பவர், வேதாந்தா உள்ளிட்ட பல நிறுவனங்கள் போட்டியிட்ட நிலையில், ஏலத்தில் அதிக தொகைக்கு வேதாந்தா கேட்டதை அடுத்து, அதன் வசமாகிறது, மீனாட்சி எனர்ஜி நிறுவனம்.
வேதாந்தா தெரிவித்த ஏலத்தொகையை, மீனாட்சி எனர்ஜிக்கு கடன் வழங்கிய நிறுவனங்களின் குழு, கடந்த 18ம் தேதியன்று ஒப்புக்கொண்டது.

Spread the love