February 3, 2023

மின் வாகனங்கள் வாங்க குறைந்த வட்டியில் கடன் வங்கிகளுக்கு நிதின் கட்கரி கோரிக்கை

புது தில்லி, டிச.24

சுற்றுச்சூழலுக்கு அதிக மாசை ஏற்படுத்தாத மின்சாரம், ஹைட்ரஜன் எரிபொருள் மற்றும் இரு வகை எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களை வாங்க குறைந்த வட்டியில் கடன் அளிக்க வேண்டும் என்று வங்கிகளுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த 4 அல்லது 5 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் முற்றிலுமாக கைவிடப்பட வேண்டும் என்பது எனது கனவாக உள்ளது. பல நகரங்களில் பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது அதிகரிக்கும்போது அவற்றை இயக்குவதற்கான செலவும் குறையும். இதனால், பயணிகளுக்கான கட்டணமும் குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார்.

மேலும், மாற்று எரிபொருளுக்கு மாற வேண்டும் என்று கூறுவது செலவைக் குறைப்பதற்காக மட்டுமல்ல. இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பும் வெகுவாக குறையும். இது ஒட்டுமொத்த மனித குலத்துக்கே நன்மையளிக்கும் விசயமாகும். மின்சாரம், ஹைட்ரஜன் எரிபொருள், பேட்டரி – பெட்ரோல் என இரு வகையான எரிபொருள்களில் இயங்கும் வாகனங்களை வாங்குவோருக்கு வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்க முன்வர வேண்டும் என்று அமைச்சர ;கட்கரி தெரிவித்தார்.

Spread the love