December 9, 2022

மாநில அரசுகள் சம்மதித்தால் எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர தயார்: பூரி

ஸ்ரீநகர், நவ.15

பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவதற்கு மத்திய அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால் அதற்கு மாநிலங்கள் சம்மதிக்க வேண்டும். மாநிலங்கள் சம்மதித்தால், அதை செய்ய தயாராக இருக்கிறோம் என்று பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:

மதுபானம், எரிபொருட்கள் ஆகியவற்றில் இருந்து மாநிலங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. நல்ல வருவாய் கிடைக்கிறது என்றால், அதை யாரும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். பணவீக்கம் பற்றி மத்திய அரசு மட்டுமே கவலைப்படுகிறது. பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வருவது பற்றி கடைசியாக லக்னோவில் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்குமாறு கேரள ஐகோர்ட்டு யோசனை தெரிவித்தது.

ஆனால், அந்த மாநில நிதியமைச்சர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த ஓராண்டில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைவாக உயர்த்தப்பட்டது இந்தியாவில்தான். வடஅமெரிக்காவில் ஓராண்டில் 43 சதம் விலை உயர்த்தப்பட்டது. ஆனால், இந்தியாவில் வெறும் 2 சதம் மட்டுமே அதிகரித்தது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, மக்களை பாதிக்காத வகையில், உற்பத்தி வரியை குறைத்துள்¼ளாம். சில அண்டை நாடுகளில், எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவுவதுடன், விலையும் அதிகமாக உள்ளது. ஆனால், நமக்கு கிராமப்புற பகுதிகளில் கூட தட்டுப்பாடு இல்லை. மத்திய, மாநில அரசுகளின் போக்குவரத்து வசதிக¼ள இதற்கு காரணம். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. விலையை சீராக வைத்திருப்பதற்கு முயன்று வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Spread the love