December 9, 2022

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வு
ரூ. 1.16 லட்சம் கோடி விடுவிப்பு: நிதியமைச்சகம்

புது தில்லி, நவ.11

மாநிலங்களுக்கு அளிக்கப்படும் மாதாந்திர வரிப் பகிர்வின் கீழ் நவம்பர் மாதத்துக்கு இரண்டு தவணை நிதியாக ரூ. 1,16,665 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து நிதியமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

வழக்கமாக, மாதாந்திர வரிப் பகிர்வு தவணையாக ரூ. 58,333 கோடி விடுவிக்கப்படும் நிலையில், இந்த மாதம் மேலும் ஒரு தவணை சேர்த்து இரண்டு தவணை தொகையை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. மூலதனம் மற்றும் மேம்பாட்டு செலவினங்களை விரிவுபடுத்தி மாநிலங்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரிப் பகிர்வின்படி 28 மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ள ரூ. 1,16,665 கோடியில், தமிழகத்துக்கு ரூ. ரூ.4,759 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்துக்கு ரூ. 20,929 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Spread the love