November 29, 2022

மாதவரம்-தரமணி மெட்ரோ சுரங்கப் பாதை 2025க்குள் பணிகளை முடிக்க மெட்ரோ திட்டம்

சென்னை, அக்.26

மாதவரம் – தரமணி இடையே 21 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை 2025ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், ரூ.63,246 கோடி மதிப்பில் 118.9 கி.மீ. தொலைவுக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. மாதவரம் – சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கி.மீ.தொலைவுக்கும், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி பைபாஸ் இடையே 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே 47 கி.மீ. தொலைவுக்கும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் மொத்தம் 42.6 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதில், அதிகபட்சமாக, மாதவரம் – சிறுசேரி சிப்காட் வழித்தடத்தில் 26.7 கி.மீ. தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் மாதவரம் பால் பண்ணையில் சுரங்கம் தோண்டும் பணியை அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த தடத்தில், மாதவரம் – தரமணி இடையே 21 கி.மீ. தொலைவுக்கு பூமிக்கடியில் 82 அடி ஆழத்தில் 82 அடி அகலத்தில் 2 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், சுரங்கப்பாதை அமைப்பதற்காக மொத்தம் 23 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. முதல்கட்டமாக, 8 சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இயந்திரமும் தினசரி 33அடி வரை சுரங்கம் தோண்டும். மாதவரம் – சிறுசேரி சிப்காட் வரை3-வது வழித்தடத்தில் மாதவரம் – தரமணி வரை 21 கி.மீ. தொலைவுக்கு இரு மார்க்கத்துக்கும் மெட்ரோசுரங்கப்பாதை அமைக்க உள்¼ளாம். சுரங்கம் துளையிடும் இயந்திரத்தின்பணி தொடங்கிய பிறகு, முடியும் வரையில் நிறுத்தப்படாது. இதை நிறுத்தினால், சுரங்கப்பாதை பணியில் பாதிப்பு ஏற்படும். இந்த சுரங்கப்பாதை பணியை வரும் 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்¼ளாம் என்றனர்.

Spread the love