October 4, 2022

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யுவி 700
விலையை உயர்த்தியது

மும்பை, செப்.19

மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யுவி 700 மாடல் விலையை உயர்த்துவதாக அறிவித்து இருக்கிறது. இம்முறை விலை உயர்வு எக்ஸ்யுவி 700 அனைத்து வேரியண்ட்களுக்கும் பொருந்தும்.

விலை உயர்வு ஒவ்வொரு வேரியண்டிற்கு ஏற்ப ரூ.20,072 துவங்கி அதிகபட்சம் ரூ. 36,814 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. புதிய மஹிந்திரா எக்ஸ்யுவி 700 ஏஎக்ஸ் 7 டீசல் ஏடி லக்சரி பேக் 7 சீட்டர் வேரியண்ட் விலை அதிகளவாக ரூ. 36,814 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

ஏஎக்ஸ்3 டீசல் மேனுவல் டிரான்ஸ்மிசன் 5 சீட்டர் வேரியண்ட் விலை ரூ. 20,072 உயர்த்தப்பட்டு இருக்கிறது.

விலை உயர்வின் படி மஹிந்திரா எக்ஸ்யுவி 700 மாடல் தற்போது ரூ. 13 லட்சத்து 45 ஆயிரம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 24 லட்சத்து 95 ஆயிரம் என மாறி இருக்கிறது.
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Spread the love