February 3, 2023

மத்திய அரசில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டு பழைய வாகனங்கள் ஒழிப்பு: நிதின் கட்கரி

புது தில்லி, நவ.26

மத்திய அரசு துறைகளில் 15 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்படும் வாகனங்களை அழிப்பதற்கான உத்தரவில் மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கையயழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இது குறித்து மேலும் செய்தியாவது: நாட்டில் மிக பழைய வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் சுற்றுச்சூழல் மாசு, குறிப்பாக காற்று மாசு அதிகளவில் ஏற்படுகிறது. இதை தடுப்பதற்காக, 15 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை ஓரம் கட்ட மத்திய அரசு புதிய கொள்கை வகுத்துள்ளது. இந்நிலையில், மத்திய அரசின் அனைத்து துறைகளில் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை ஓரம் கட்ட, மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடந்த விழாவில் அவர் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசால் பயன்படுத்தப்படும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வாகனங்களை அழிப்பதற்கான உத்தரவில் கையயழுத்திட்டு உள்¼ளன். இது பற்றி அனைத்து மாநில அரசுகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. பழைய வாகனங்களை ஒழிக்கும் இந்த கொள்கை முடிவை பின்பற்றும்படி, அவையும் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளன என்றார்.

Spread the love