October 3, 2022

மத்திய அரசின் சுகாதார செலவினம் சரிவு புள்ளிவரம் தகவல்

புது தில்லி, செப்.13

மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான செலவினம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2017-18 ஆம் ஆண்டில் 1.35 சதமாக இருந்தது, அடுத்த ஆண்டில் 1.28 சதவீதமாக சரிந்திருப்பது புள்ளிவிவரங்கள் மூலமாக தெரியவந்துள்ளது.

மேலும், இந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கான ஒட்டுமொத்த செலவினம் 2017-18 ஆம் ஆண்டில் 40.8 சதமாக இருந்தது, 2018-19ம் ஆண்டில் 34.3 சதமாக குறைந்துள்ளது. இதே கால கட்டத்தில் மாநில அரசின் செலவின பங்கு அதிகரித்துள்ளது. மாநில அரசு சார்பில் சுகாதாரத் துறைக்கு மேற்கொள்ளப்பட்ட மொத்த செலிவினம் 2017-18ம் ஆண்டில் 59.2 சதமாக இருந்தது அடுத்த ஆண்டில் 65.7 சதமாக அதிகரித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் மூலான ஒட்டுமொத்த சுகாதாரத் துறைக்கான செலவினம் 2017-18ம் ஆண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதமாக இருந்தது அடுத்த ஆண்டில் 3.2 சதமாக சரிந்துள்ளது.

அதே நேரம், நாட்டில் தனி நபருக்கான மருத்துவ செவினம் 2017-18ம் ஆண்டில் ரூ.4,297-ஆக இருந்தது, அடுத்த ஆண்டில் ரூ.4,470-ஆக அதிகரித்துள்ளது. இது 2013-14ம் ஆண்டில் 3,638-ஆக இருந்தது. அதுபோல, சுகாதார செலவினத்துக்கான சமூக பாதுகாப்பு திட்டச் செலவினம் 2013-14ம் ஆண்டில் 6 சதமாக இருந்தது, 2018-19ம் ஆண்டில் 9.6 சதமாக உயர்ந்துள்ளது.

Spread the love