மும்பை, நவ.25
அனைத்து இணையதள வர்த்தக நிறுவனங்களும் போட்டியிடக் கூடிய விலையில் பொருள்களை விற்பனை செய்வதற்கு வசதியாக மத்திய அரசு உருவாக்கியுள்ள ஓப்பன் நெட்வொர்க் ஃபார் டிஜிடல் காமர்ஸ்’ (ஓஎன்டிசி) தளத்தில் மீஷோ நிறுவனம் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இது குறித்து விரிவான செய்தியாவது: சோதனை முறையில் தொடக்கப்பட்டுள்ள ஓஎன்டிசி-யில் உறுப்பினராக சேரும் வாடிக்கையாளர்கள், அந்த தளத்தில் இருக்கும் அனைத்து இணையதள வர்த்தக நிறுவனங்கள் சந்தையிடும் பொருள்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வாங்க முடியும். இது குறித்து மீஷோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
“சிறு வர்த்தகர்களின் பொருள்களுக்கும் கூடுதல் வாய்ப்பு கிடைக்கச் செய்யவும், இணையதள வர்த்தகத்தை மக்கள்நல நடவடிக்கையாக மாற்றவும் மத்திய அரசின் ஓஎன்டிசி தளத்தில் இணைந்துள்¼ளாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.