November 29, 2022

மதுரை -வாரணாசி இடையே பாரத் கவுரவ் ரயில் தெற்கு ரயில்வே தகவல்

சென்னை, நவ.17

மதுரை – வாரணாசி இடையே, பாரத் கவுரவ் யாத்திரை ரயில் இயக்கப்பபவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்களை மக்கள் கண்டு களிக்கும் வகையில், பாரத் கவுரவ் ரயில் திட்டம், கடந்த ஆண்டு நவம்பர் 23ல் அறிமுகம் செய்யப்பட்டது.

தனியார் பங்களிப்புடன் அந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. யாத்திரை ரயில்களை மட்டும், ரயில்வே இயக்கும். இதர சேவைகள், தனியார் வாயிலாக வழங்கப்படுகின்றன. இந்நிலையில், மதுரை – உ.பி., மாநிலம் வாரணாசி இடையே பாரத் கவுரவ் ரயில் இயக்கப்பட உள்ளது.

மதுரையிலிருந்து 17ந் தேதி இயக்கப்படும் இந்த ரயில், 22ம் தேதி இரவு 7:00 மணிக்கு வாரணாசி செல்கிறது.

வாரணாசியில் இருந்து நவ.23 காலை 5:00 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை, மதுரை, ராமேஸ்வரம் வழியாக நவ., 28ம் தேதி தெலுங்கானா மாநிலம் மவுலாலிக்கு, இரவு 10:30 மணிக்கு சென்றடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Spread the love