December 9, 2022

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர், நவ.7

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் குடும்ப அட்டை வேலைவாய்ப்பு முதியோர் விபத்து நிவாரணம் மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

முன்னதாக பொது விநியோக திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு புதிய மின்னனு குடும்ப அட்டைளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.ரவிகுமார் தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) ஜெயராணி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துகழுவன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Spread the love