October 3, 2022

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

விருதுநகர், செப்.19

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள்; கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் குடும்ப அட்டை வேலைவாய்ப்பு முதியோர் விபத்து நிவாரணம் மாற்றுத்திறனாளிகள் நலிந்தோர் நலத்திட்டம் மற்றும் விதவை உதவித்தொகை திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களை மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். முன்னதாக மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் இலவச தேய்ப்பு பெட்டிகள் 2 நபர்களுக்கு தலா ரூ.9,470/- மதிப்பிலும் இலவச தையல் இயந்திரங்கள் 8 நபர்களுக்கு ரூ.43,824/- மதிப்பிலும் மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா 10 நபர்களுக்கு ரூ.4.50 லட்சம் மதிப்பிலும் மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 2 நபர்களுக்கு இலவச தையல் இயந்திரம் தலா ரூ.5,500/- மதிப்பிலும் ஆக மொத்தம் 22 நபர்களுக்கு ரூ.5,23,764/- மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி வழங்கினார்.

Spread the love